×

கிட்ஸ் பிளேஸ்!

விடுமுறை, திருமண வீடு, விசேஷ வீடு என எங்கும் எதிலும் குழந்தைகளை மொபைலும் கையுமாகத்தான் பார்க்க முடிகிறது. பெரும்பாலும் மொபைல் கேம், அல்லது கார்ட்டூன் வீடியோக்கள், ஜாலியான வீடியோக்கள் பார்ப்பது அவர்களின் பொழுதுபோக்கு. ஆனாலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மொபைலில் என்னப் பார்க்கிறார்கள், அவர்கள் ஸ்க்ரீன் நேரம் என்ன? மேலும் அவர்களுக்கான செயலிகள் மற்றும் தளங்கள் தவிர வேறு ஏதேனும் பார்க்கிறார்களா? குழந்தைகள் மொபைல் பயன்படுத்தும் தருவாயில் நமக்கான செயலிகள், தளங்கள் திறக்காமல் பார்க்க என முழுமையான குழந்தைகள்-பெற்றோர்களுக்கான லாக் செயலியாக உதவுகிறது ‘கிட்ஸ் பிளேஸ்’ (Parental Control – Kids Place). குழந்தைகள் எவ்வளவு நேரம் மொபைல் பார்க்கிறார்கள், என்ன பார்க்கிறார்கள் என அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் இந்தச் செயலி. ஒருவேளை உங்கள் குழந்தைக்கென தனி மொபைல் இருப்பின் இந்தச் செயலியை அவர்கள் மொபைலிலும் தரவிறக்கம் செய்து வைக்கலாம். காரணம் நிச்சயம் கூடாது என்றால் பிடிவாதம்தான் பிடிப்பர். அதற்கு ஒரு மாற்று வழியே இந்த கிட்ஸ் பிளேஸ் செயலி.

The post கிட்ஸ் பிளேஸ்! appeared first on Dinakaran.

Tags : Kids Place! ,
× RELATED “ஆண்டுக்கு 2 கல்வி ஆண்டு முறையை...